வாகனத்திற்கு வழி விடாமல் சென்றதாக அரசு பஸ் டிரைவரை தாக்கிய ராணுவ வீரர்...! கிருஷ்ணகிரியில் பரபரப்பு
கிருஷ்ணகிரியில் ராணுவ வாகனத்திற்கு வழி விடாமல் சென்றதாக அரசு பஸ் டிரைவரை ராணுவ வீரர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே ராணுவ வீரர் வந்த காரில் முன்னால் அரசு பஸ் சென்றுள்ளது. அப்போது பஸ்சை முந்தி செல்ல ராணுவ வீரரின் வாகனம் முயன்றதாக கூறப்படுகின்றது. இதில் ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த ராணுவ வீரர், ராணுவ வாகனத்திற்கு வழி விடாமல் சென்றதாக கூறி, அரசு பஸ் டிரைவரை தாக்கி உள்ளார்.
இதனால் அதிர்ச்சி டிரைவர் பஸ்சை சாலையில் நிறுத்திவிட்டு ராணுவ வீரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், ராணுவ வீரர் மன்னிப்பு கேட்டால் தான் வாகனத்தை எடுப்பேன் என்று கூறியுள்ளார். இவருக்கு ஆதரவாக பொதுமக்களும் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், வேறு வழியின்றி ராணுவ வீரர் மன்னிப்பு கேட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.