பொள்ளாச்சி
பொள்ளாச்சியை சேர்ந்த 8 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறாள். அந்த சிறுமிக்கு, அவளது சித்தப்பா பாலியல் ெதால்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோப்பெருந்தேவி தலைமையிலான போலீசார், அந்த சிறுமியின் சித்தப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.