8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது
தேவதானப்பட்டியில் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்றை தீயணைப்பு படையினர் பிடித்தனர்.
தேவதானப்பட்டி காமாட்சி அம்மன் கோவில் அருகே மஞ்சளாறு உள்ளது. இந்த ஆற்றின் கரையோரத்தில் உள்ள புளியமரத்தை ஒட்டி மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் பெரியகுளம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் பழனி தலைமையில் வீரர்கள் அங்கு விரைந்து வந்து சுமார் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்தனர். பின்னர் அந்த பாம்பை மஞ்சளாறு வனப்பகுதியில் கொண்டு போய் விட்டனர்.