தந்தை திட்டியதால் மனமுடைந்த 11-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

விழுப்புரத்தில் தந்தை திட்டியதால் மனமுடைந்த 11-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2024-07-21 23:56 GMT

கோப்புப்படம் 

விழுப்புரம்,

விழுப்புரம் அருகே உள்ள சாலாமேடு என்.ஜி.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்தவர் மங்கள்ராஜ் மகன் கார்த்திகேயன் (17 வயது). இவர் விழுப்புரம் காமராஜர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று கார்த்திகேயனின் வீடு அருகே உள்ள மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது கார்த்திகேயனிடம் கும்பாபிஷேக நீர் வாங்கி வருமாறு அவரது தந்தை கூறினார். ஆனால் கார்த்திகேயன் செல்ல மறுத்ததால் அவரை மங்கள்ராஜ் திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த கார்த்திகேயன் தனது ஓட்டு வீட்டில் உள்ள இரும்பு குழாயில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கார்த்திகேயனின் தாய் விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்