அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் கார் கண்ணாடி உடைப்பு; வாலிபர் கைது

அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் கார் கண்ணாடி உடைப்பு சம்பவத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-09-15 18:38 GMT

ஜெயங்கொண்டம்:

தகராறு

அரியலூர் மாவட்டம், செந்துறை ஸ்டேட் வங்கி காலனி தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன்(வயது 43). பெரம்பலூர் மாவட்ட அ.ம.மு.க. செயலாளரான இவர், நேற்று செந்துறையில் இருந்து ஜெயங்கொண்டம் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார். வாரியங்காவல் பகுதியில் கார் வந்தபோது, 2 பேர் நடுரோட்டில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அவர்களிடம், கார்த்திகேயனின் கார் டிரைவர் செந்தில்குமார் வழி விடுமாறு கூறியதாக தெரிகிறது. இதனால் அவரை, குடிபோதையில் இருந்த 2 பேரும் தகாத வார்த்தைகளால் திட்டி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அதில் ஒருவர், கார் கண்ணாடியை உடைத்தார். இதையடுத்து 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

காயம்

கார் கண்ணாடி உடைந்ததில் கார்த்திகேனுக்கும், செந்தில்குமாருக்கும் ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். மேலும் இது குறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக இலையூர் மெயின்ரோட்டு தெருவை சேர்ந்த பூபாலன்(25), இலையூர் மேலவெளியை சேர்ந்த சிவா(25) ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து சிவாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்