ஆம்புலன்ஸ் பழுதானதால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

நாகர்கோவில் ஒழுகினசேரியில் ஆம்புலன்ஸ் பழுதானதால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு;

Update:2023-01-01 02:32 IST

நாகர்கோவில், 

புதுசேரியில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதிக்கு நேற்று ஒரு தனியார் ஆம்புலன்ஸ் ஒன்று புறப்பட்டது. இந்த ஆம்புலன்ஸ் நாகர்கோவில் ஒழுகினசேரி பாலம் அருகே வந்தது. அப்போது திடீரென ஆம்புலன்ஸ் பழுதாகி சாலையின் நடுவில் நின்றது. ஆம்புலன்ஸ் டிரைவர் வாகனத்தை இயக்க முயற்சித்தும், சற்றும் நகரவில்லை. சாலையின் நடுவே நின்றதால் ஒழுகினசேரியில் இருந்து வடசேரி வரையிலும், ஒழுகினசேரியில் இருந்து நான்கு வழிசாலை வரை என இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் நேற்று மதியம் ஒழுகினசேரி பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த போக்குவரத்து ஒழுங்குப்பிாிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போக்குவரத்தை சீர் செய்தனர். ஆம்புலன்ஸ் திடீரென பழுதானால் அங்கு 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்