அம்பேத்கர் பிறந்தநாள் விழா
திருவாரூரில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. 2எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.;
கொரடாச்சேரி:
திருவாரூரில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. 2எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.
பிறந்த நாள்
அம்பேத்கரின் 132-வது பிறந்த நாளை முன்னிட்டு திருவாரூர் எம்.எல்.ஏ. அலுவலகம் முன்பு அமைக்கப்பட்ட அம்பேத்கர் படத்திற்கு பூண்டி. கலைவாணன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாநில விவசாயஅணி துணைஅமைப்பாளர் சங்கர், நகர செயலாளர் பிரகாஷ், நகர்மன்ற உறுப்பினர்கள் செந்தில், அசோகன், ரஜினிசின்னா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதேபோல் திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட அழகிரிநகர் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருவாரூர் ரெயில் நிலையத்தில் இருந்து நகரின் முக்கிய விதிகள் வழியாக அம்பேத்கர் பட ஊர்வலம் நடந்தது.
மன்னார்குடி
மன்னார்குடி ருக்மணி பாளையம் சாலையில் உள்ள அம்பேத்கரின் உருவ சிலைக்கு முன்னாள் அமைச்சரும், திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான ஆர்.காமராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சிவா ராஜமாணிக்கம், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொன்வாசுகிராம், மேற்கு ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வம், மன்னார்குடி நகர செயலாளர் ஆர்.ஜி.குமார், மன்னார்குடி ஊராட்சி ஒன்றியகுழு தலைவர் மனோகரன் உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். அதேபோல இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மன்னார்குடி ஒன்றிய, நகரக் குழு சார்பில் மாவட்ட செயலாளர் வை.செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.