ஆழ்வார்திருநகரி பள்ளி ஆண்டு விழா

ஆழ்வார்திருநகரி பள்ளி ஆண்டு விழா

Update: 2023-04-23 18:45 GMT

தென்திருப்பேரை:

ஆழ்வார்திருநகரி டி.என்.டி.ஏ. நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. பள்ளி தாளாளர் அருமைத்துரை ஜெபம் செய்து விழாவை தொடங்கி வைத்தார். ஆழ்வார்திருநகரி பேரூராட்சி மன்ற தலைவி சாரதா பொன்இசக்கி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்வி மற்றும் விளையாட்டில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். விழாவில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ஜோசப் ஜெயதாஸ் இஸ்ரவேல், தூத்துக்குடி நாசரேத் திருமண்டல லேசன் அதிகாரி ஜான்சன் பால் டேனியல், ஆழ்வார்திருநகரி ஆலய பொருளாளர் ஜான்சன் உட்பட ஆசிரியர்கள், பெற்றோர், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்