46 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

ஆடுதுறையில் 46 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் சந்தித்து பள்ளி பருவ நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

Update: 2023-05-01 20:30 GMT

திருவிடைமருதூர்:

ஆடுதுறையில் 46 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் சந்தித்து பள்ளி பருவ நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

வாட்ஸ்-அப் குழு

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே ஆடுதுறை குமரகுருபரர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த அரசு உதவி பெறும் பள்ளியில் கடந்த 1977-ம் ஆண்டு படித்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் பல்வேறு ஊர்களில் வசித்து வருகின்றனர்.

46 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் சந்திக்க முடிவு செய்தனர். இதன் மூலம் வாட்ஸ்-அப் குழு மூலம் தங்களது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

இதை தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் தங்கள் படித்த பள்ளியில் 46 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் மீண்டும் சந்தித்து கொண்டனர். அப்போது அவர்கள் பள்ளியில் படித்த போது நடந்த பழைய நினைவுகளை பகிர்ந்்து கொண்டு மகிழ்ந்தனர்.

தங்களுக்கு கல்வி போதித்த ஆசிரியர்களிடம் ஆசி பெற்றனர். மேலும் அவர்களுக்கு நினைவு பரிசு மற்றும் இனிப்புகள் வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்