முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

கடையநல்லூர் அருகே பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.;

Update:2023-05-29 02:13 IST

கடையநல்லூர்:

கடையநல்லூர் அருகே இடைகால் மீனாட்சி சுந்தரம் ஞாபகார்த்த மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது. முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் இஸ்ரோ அருணாசலம் தலைமை தாங்கினார். இணை செயலாளர் இசக்கியப்பன், பொருளாளர் குமரன் முத்தையா, துணைத்தலைவர்கள் சார்லஸ், ஜெயராம், செயற்குழு உறுப்பினர் வசந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் சண்முகசுந்தரம் வரவேற்று, சங்க செயல்பாடுகள் குறித்து பேசினார்.

தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்தையா கலந்து கொண்டு 10, 12-ம் வகுப்பில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கினார். ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. நலிவுற்ற மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது. முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் தமிழிசை ஆய்வாளர் நா.மம்மதுவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

ஓய்வுபெற்ற மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆறுமுகம், போலீஸ் அதிகாரிகள் பிச்சையா, சுப்பிரமணியன், தலைமை ஆசிரியர் ராஜசேகரன், பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர் ராசி சரவணன், தொழில் அதிபர்கள் வைரவன், கணேசன், பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இணை செயலாளர் வி.குமாரமுருகன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்