மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்
மயிலம் மேற்கு ஒன்றியத்தில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
மயிலம்:
மயிலம் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட மலையம்பட்டு, சாலை, பாம்பூண்டி கிராமங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர் அக்கட்சியில் இருந்து விலகி முன்னாள் அமைச்சரும், விழுப்புரம் மாவட்ட செயலாளருமான சி.வி.சண்முகம் எம்.பி. முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களுக்கு சி.வி.சண்முகம் எம்.பி., கட்சி துண்டினை அணிவித்து வரவேற்றார். அப்போது மயிலம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் புலியனூர் விஜயன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் வக்கீல் பாஸ்கர், பெரமண்டூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் சீனுவாசன் உள்பட பலர் உடனிருந்தனர்.