தி.மு.க கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொ.ம.தே.கவுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு

ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் தி.மு.க.கூட்டணியில் நவாஸ் கனி போட்டியிடுவார் என்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தெரிவித்துள்ளது.

Update: 2024-02-24 13:39 GMT

சென்னை,

தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. தி.மு.க.வில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.

அ.தி.மு.க. தரப்பில் மெகா கூட்டணி அமைப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. கடந்த தேர்தல்களில் ஏற்கனவே கூட்டணியில் இருந்த பா.ம.க. மற்றும் தே.மு.தி.க.வை தங்கள் பக்கம் மீண்டும் இழுக்க அ.தி.மு.க. தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்ய தொடங்கியுள்ளது. அந்த வகையில், தி.மு.க கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மக்களவை தொகுதியில்   நவாஸ் கனி போட்டியிடுவார் என்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி அறிவித்துள்ளது.

அதேபோல், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்தக் கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. உதயசூரியன் சின்னத்திலேயே கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிட உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்