நீடித்த நிலையான பருத்தி இயக்கத்தினை செயல்படுத்த ரூ.11 கோடி நிதி ஒதுக்கீடு -அரசு தகவல்

நீடித்த நிலையான பருத்தி இயக்கத்தினை செயல்படுத்த ரூ.11 கோடி நிதி ஒதுக்கீடு அரசு தகவல்.

Update: 2023-07-18 19:16 GMT

சென்னை,

தமிழ்நாட்டில் பருத்தி உற்பத்தியை உயர்த்தும் நோக்கில், பருத்தி சாகுபடி செய்யப்படும், கடலூர், விழுப்புரம், திண்டுக்கல், தூத்துக்குடி உள்பட 29 மாவட்டங்களில் நீடித்த நிலையான பருத்தி இயக்கத்தினை செயல்படுத்த வேளாண்துறை முடிவு செய்து இருக்கிறது.

வேளாண் ஆணையர் நீடித்த நிலையான பருத்தி இயக்கத்தினை 2023-24-ம் ஆண்டு பருத்தி சாகுபடி செய்யப்படும் 29 மாவட்டங்களில் செயல்படுத்திட, ரூ.11 கோடிக்கு நிர்வாக அனுமதி, நிதி ஒப்பளிப்பு, திட்ட செயலாக்கத்துக்கான ஒப்புதல் வழங்க அரசிடம் கேட்டு இருந்தார்.

அதன்படி, அடர்நடவு சாகுபடி முறைக்கு ரூ.73 லட்சத்து 50 ஆயிரம், பருத்தியில் வேளாண் சுற்று சூழ்நிலை சார்ந்த பூச்சிநோய் மேலாண்மைக்கு ரூ.5 கோடியே 68 லட்சத்து 5 ஆயிரம், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து தொகுப்பு வினியோகத்துக்கு ரூ.4 கோடியே 20 லட்சம், ஆளில்லா வான்வெளி வாகனம் பயன்படுத்தி பூச்சிக்கொல்லிகள் தெளிப்பதற்கு வாடகை கட்டணமாக ரூ.37 லட்சத்து 50 ஆயிரம், விளம்பரம் மற்றும் இதர சில்லரை செலவினங்களுக்கு ரூ.95 ஆயிரம் என மொத்தம் ரூ.11 கோடிக்கு நிர்வாக அனுமதி, நிதி ஒப்பளிப்பு, திட்ட செயலாக்கத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளுக்கு ஒப்புதல் வழங்கி வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் சமயமூர்த்தி அரசாணை வெளியிட்டு இருக்கிறார். நீடித்த நிலையான பருத்தி இயக்கத்தினை இனம் வாரியாக செயல்படுத்திட, வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது கடைபிடிக்கவும் வேளாண்மை ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்