பாலமதி ஊராட்சி பகுதியில் சாலைகள் அமைக்க ரூ.10 லட்சம் ஒதுக்கீடு

பாலமதி ஊராட்சி பகுதியில் சாலைகள் அமைக்க ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வேலூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிைறவேற்றப்பட்டது.

Update: 2023-03-09 17:48 GMT

வேலூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு ஒன்றியக்குழு தலைவர் அமுதாஞானசேகரன் தலைமை தாங்கினார்.

துணைத்தலைவர் மகேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வின்சென்ட் ரமேஷ்பாபு, ராஜன்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். வரவு, செலவு கணக்குகள் மற்றும் தீர்மானங்களை வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் வினோத்குமார் வாசித்தார்.

கூட்டத்தில், மேல்மொணவூரில் பாதியில் நிறுத்தப்பட்ட கழிவுநீர் கால்வாய் அமைக்க ரூ.30 ஆயிரமும், பாலமதி ஊராட்சியில் பல இடங்களில் தார்சாலைகள் மற்றும் சாலையோரம் தடுப்புச்சுவர் அமைக்க ரூ.10 லட்சமும், மேல்மொணவூர் ஊராட்சி அங்கன்வாடி மைய கட்டிடம் அமைக்க ரூ.1½ லட்சமும்,

ஒன்றியக்குழு அலுவலக கூடத்துக்கு யூ வடிவில் மேஜை மற்றும் நாற்காலிகள், சிவப்பு விரிப்பு அமைத்தல் உள்ளிட்ட பணிக்காக ஒன்றிய பொதுநிதியில் இருந்து ரூ.10 லட்சத்து 98 ஆயிரம் வழங்க ஒப்புதல் அளிப்பது உள்ளிட்ட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், வேலூர் ஊராட்சி ஒன்றியக்குழு கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்