கடலில் நீராட வரும் பக்தர்களுக்கு அனைத்து வசதிகளும் தயார்
ஆடி அமாவாசையையொட்டி கடலில் நீராட வரும் பக்தர்களுக்கு அனைத்து வசதிகளும் தயார்;வேதாரண்யம் நகராட்சி ஆணையர் தகவல்
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சி ஆணையர் ஹேமலதா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:-
ஆடி அமாவாசையையொட்டி புன்னிய ஸ்தலங்களில் மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுப்பது வழக்கம். இன்று (திங்கட்கிழமை) ஆடி அமாவாசைக்கு வேதாரண்யம், சன்னதி கடல், கோடியக்கரை ஆதி சேதுகடல், வேதாமிர்த ஏரி, வேதாரண்யம் கோவிலில் உள்ள மணிகர்ணிகை தீர்த்தம் போன்றவைகளுக்கு புனித நீராட வரும் பக்தர்களுக்கு தேவையான மருத்துவ முகாம், சாலை போக்குவரத்து, சுகாதாரப்பணிகள், குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான தனித்தனி வழிகள் அமைத்து கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நீராட வரும் பக்தர்களுக்கு சிறப்பு பஸ் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன என்றார். நகராட்சி பொறியாளர் முகம்மது இப்ராஹிம் உடன் இருந்தார்.