அனைத்து துறை ஓய்வூதியர் சங்க கூட்டம்

அனைத்து துறை ஓய்வூதியர் சங்க கூட்டம் நடந்தது.

Update: 2023-06-29 18:45 GMT

விருதுநகரில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க விருதுநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட துணை தலைவர் திருவண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ராமசுப்புராஜ் செயற்குழு முடிவுகளை விளக்கி பேசினார். வட்ட கிளை தலைவர் ஜெகதீசன், மாவட்ட கருவூல அலுவலர் கூட்டிய ஓய்வூதியர் நேர்காணல் சம்பந்தமான கூட்டத்தில் அரசின் தற்போதைய நிலைப்பாடு குறித்து எடுத்துரைத்தார். 70 வயது நிரம்பிய அனைத்து ஓய்வூதியர்களுக்கும் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7850 சத்துணவு அங்கன்வாடி பணியாளர்கள், ஊராட்சி எழுத்தர்கள், வருவாய் கிராம ஊழியர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியர் அனைவருக்கும் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் செலவுத் தொகை வழங்காமல் இருக்கும் அனைத்து மனுக்கள் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் வட்ட கிளை செயலாளர் டேவிட் நன்றி கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்