வரும் ஞாயிற்றுக்கிழமை அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும் - தமிழக அரசு அறிவிப்பு

வரும் ஞாயிற்றுக்கிழமை அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Update: 2023-07-27 08:10 GMT

சென்னை,

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூன் 24-ந் தேதி தர்மபுரி மாவட்டம், தொப்பூரில் தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக இந்த முகாமானது வருகின்ற ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை ரேஷன் கடைகளில் நடைபெறுகின்றன.

இந்நிலையில், மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் பணிக்காக தமிழகத்தில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (30-ந் தேதி) அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும் என்று உணவுப் பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது. மேலும், பணிநாளுக்கு ஈடாக ஆகஸ்ட் 26-ஆம் தேதி விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்