அம்பேத்கர் சிலைக்கு அனைத்து கட்சியினர் மரியாதை

சிவகாசி, திருத்தங்கலில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு அனைத்து கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Update: 2023-04-14 19:03 GMT

சிவகாசி, 

சிவகாசி, திருத்தங்கலில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு அனைத்து கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பிறந்தநாள்

அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி சிவகாசியில் உள்ள அவரது சிலைக்கு தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாநகர செயலாளர் உதயசூரியன் தலைமை தாங்கினார். மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன், மண்டல தலைவர் சேவுகன், கவுன்சிலர் பாக்கியலட்சுமி, பகுதி செயலாளர் காளிராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் திருத்தங்கலில் உள்ள சிலைக்கும் தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மண்டல தலைவர் குருசாமி, கவுன்சிலர்கள் சேதுராமன், சசிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னாள் அமைச்சர்

இதேபோல் அ.தி.மு.க. சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜியின் தலைமையில் நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் முன்னாள் யூனியன் தலைவர் வேண்டுராயபுரம் சுப்பிரமணியம், டாக்டர் விஜய் ஆனந்த், திருத்தங்கல் பகுதி கழக செயலாளர்கள் சரவணக்குமார், கிருஷ்ணமூர்த்தி, தொடக்க வங்கி தலைவர் ரமணா, அன்புபிரியா, காமாட்சி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பா.ஜ.க. சார்பில் மாவட்ட தலைவர் சுரேஷ், மாநகர தலைவர் பாட்டக்குளம் பழனிசாமி உள்பட கட்சியின் நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் நடிகர் விஜய் மன்ற நிர்வாகிகள் உள்பட அனைத்து கட்சி நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இரட்டைமலை சீனிவாசன்

சிவகாசி-சாத்தூர் ரோட்டில் உள்ள மீனம்பட்டி கிராமத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு அப்பகுதி மக்கள் பால் அபிஷேகம் செய்தனர். பின்னர் கிராம மக்கள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிவகாசி யூனியன் துணைத்தலைவர் விவேகன்ராஜ், அனுப்பன்குளம் பஞ்சாயத்து தலைவர் கவிதா பாண்டியராஜ் ஊர் நாட்டாமை சின்னச்சாமி, வார்டு உறுப்பினர் பனிமலைதாஸ், ஒன்றிய கவுன்சிலர்கள் விஸ்வநத்தம் கணேசன், தனலட்சுமி கண்ணன், கவிதாபிரவீன், தி.மு.க. ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் உசிலை தங்கராம் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அதே பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இரட்டைமலை சீனிவாசன் படம் திறப்பு விழாவும், ரத்ததான முகாமும் நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஒன்றிய கவுன்சிலர் அன்பரசு செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்