அனைத்து உறுப்பினர்களின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்

நிதிநிலையை பொறுத்து அனைத்து உறுப்பினர்களின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என வேதாரண்யம் ஒன்றியக்குழு தலைவர் தெரிவித்தார்.;

Update:2022-11-15 00:15 IST

வேதாரண்யம்:

நிதிநிலையை பொறுத்து அனைத்து உறுப்பினர்களின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என வேதாரண்யம் ஒன்றியக்குழு தலைவர் தெரிவித்தார்.

ஒன்றியக்குழு கூட்டம்

வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய குழுவின் சாதாரண கூட்டம் ஒன்றிய குழு தலைவர் கமலா அன்பழகன் தலைமையில் நடந்தது. ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராஜு பாஸ்கரன் முன்னிலை வகித்தார்.இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் சேதமடைந்த சாலைகள், பள்ளிகளை சீரமைக்க வேண்டும். மின்விளக்கு உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் குறித்து பேசினர்.

கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்

மேலும் வேதாரண்யம் நகராட்சியில் பூங்கா வசதி நன்றாக உள்ளது. அது போல் வானம் கோட்டகம் பகுதியில் உள்ள காலியிடங்களில் பூங்கா அமைக்க வேண்டும். தொற்று நோய் பரவாமல் தடுக்க கொசு மருந்து அடிக்க வேண்டும் என வலியுறுத்தி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.உறுப்பினர்களின் கேள்விகளுக்கு ஒன்றியக்குழு தலைவர் கமலா அன்பழகன் பதில் கூறுகையில், நிதிநிலையை பொறுத்து அனைத்து உறுப்பினர்களின் கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்