அனைத்து சமுதாய நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம்

வள்ளிமலை சுப்பிரமணியசுவாமி கோவில் வளாகத்தில் அனைத்து சமுதாய நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-05-03 11:00 GMT

வள்ளிமலை

வள்ளிமலை சுப்பிரமணியசுவாமி கோவில் வளாகத்தில் அனைத்து சமுதாய நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

காட்பாடி தாலுகா வள்ளிமலை சுப்பிரமணியசுவாமி கோவில் வளாகத்தில் தமிழ்நாடு காவல்துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் அனைத்து சமுதாய நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. வேலூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு உதவி ஆய்வாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார்.

இதில் சமத்துவம் தழைக்க சாதி ஏற்றத்தாழ்வுகளை களைவோம், மனித குலம் சிறக்க தீண்டாமை வேண்டாம், சாதியால் ஏன் வேற்றுமை, தேசியம் காக்க மத இனப் பாகுபாடு பார்க்க வேண்டாம் உள்ளிட்ட தலைப்புகளில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சக மனிதர்களை சாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காண மாட்டேன் என்றும் சாதி இன வட்டார மத அல்லது மொழி பாகுபாடு எதுவும் இன்றி இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வு கூறும் ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் அனைத்து சமுதாய மக்களுக்கும் எவ்வித பாகுபாடு இன்றி ஒத்துழைப்பு நன்கிடவும் பாடுபடுவோம் என்றும் பல்வேறு உறுதிமொழிகளை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

சிறப்பு விருந்தினராக காட்பாடி ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் கழக ஆய்வாளர் அருணாமற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்