திருவேங்கடம் பஸ்நிலையத்துக்குள் அனைத்து பஸ்களும் வந்து செல்ல வேண்டும்; பொதுமக்கள் கோரிக்கை

திருவேங்கடம் பஸ்நிலையத்துக்குள் அனைத்து பஸ்களும் வந்து செல்ல வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update:2023-03-28 00:15 IST

திருவேங்கடம்:

திருவேங்கடம் காமராஜர் பஸ்நிலைய வளாகத்திற்குள் நகர பஞ்சாயத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. ஆனாலும் பஸ் நிலையத்திற்குள் விரல் விட்டு எண்ணக்கூடிய பஸ்கள் மட்டுமே வந்து செல்கின்றன. பெரும்பாலான பஸ்கள் மெயின் பஜாரிலேயே பயணிகளை இறக்கி விட்டு விட்டு பஸ்நிலையத்திற்கு செல்லாமல் புறக்கணித்து வருகின்றன. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென நகர பஞ்சாயத்து நிர்வாகத்திற்கு பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனாலும் பேரூராட்சி நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக பஸ்கள் வராததால் பல்வேறு கார்கள் மற்றும் வேன்கள் அங்கு நிறுத்தப்பட்டு அது கார் ஸ்டாண்டாக மாறி வருகிறது.

எனவே அனைத்து பஸ்களையும் பஸ்நிலையத்திற்குள் வந்து செல்ல பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவேங்கடம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்