அகில பாரத வித்யார்த்தி பரிஷத் மாநில மாநாடு

நெல்லையில் அகில பாரத வித்யார்த்தி பரிஷத் மாநில மாநாடு நடந்தது.

Update: 2023-01-20 20:55 GMT

அகில பாரத வித்யார்த்தி பரிஷத் மாநில மாநாடு நெல்லை சந்திப்பில் உள்ள சங்கீத சபாவில் நேற்று தொடங்கியது. `வையத்தலைமை கொள்ளும் சுயசார்பு பாரதம்' என்ற தலைப்பில் இந்த மாநாடு நடந்தது. மாநில தலைவர் சவிதா தலைமை தாங்கினார். மாநில செயலாளர் கோபி வரவேற்று பேசினார். அகில பாரத இணை அமைப்பாளர் பாலகிருஷ்ணா, அய்யா வழி சிவச்சந்திரன், வாஞ்சிநாதன் பேரன் ஹரிஹர சுப்பிரமணியன், விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளி தாளாளர் திருமாறன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினார்கள். மாநாட்டில் கருத்தரங்கம் மற்றும் இந்திய சுதந்திர போராட்டத்திற்காக போராடிய வீரர்களின் தியாக வாழ்க்கை கண்காட்சிகள் இடம்பெற்றன. இன்று (சனிக்கிழமை) நடைபெறும் மாநாட்டில் மத்திய மந்திரி எல்.முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்