அகிலாண்டபுரம்மகாலட்சுமி பள்ளி ஆண்டு விழா

அகிலாண்டபுரம் மகாலட்சுமி பள்ளி ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.

Update: 2023-03-27 18:45 GMT

கோவில்பட்டி:

அகிலாண்டபுரம் மகாலட்சுமி நடுநிலைப் பள்ளியின் 86-வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி செயலாளரும், மாவட்ட ஊராட்சி துணை தலைவருமான மகாலட்சுமி க. சந்திரசேகர் தலைமை தாங்கினார். பள்ளி துணை செயலாளர் ச. பாண்டியராஜ் முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக வட்டார கல்வி அலுவலர் ராஜம்மாள், பாண்டியன் கிராம வங்கி மேலாளர் சுகுமார், ஊராட்சி மன்ற துணை தலைவர் பால்ராஜ், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் தர்மராஜ், ஆசிரியர்கள் காசிராஜன், அந்தோணி, ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் படிப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஊராட்சி துணை தலைவர் மகாலட்சுமி கே. சந்திரசேகர் பரிசுகள் வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை ச. அமராவதி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்