ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நெல்லையில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

Update: 2023-03-28 19:55 GMT

அரசு போக்குவரத்து கழகத்தில் காலிப்பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்ப வேண்டும். கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஓய்வு கால பணப்பலன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை வண்ணார்பேட்டையில் அரசு போக்குவரத்து கழக ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சங்க பொது செயலாளர் உலகநாதன் தலைமை தாங்கினார். உதவி தலைவர்கள் மணிமாறன், ஹரிகிருஷ்ணன், ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் லட்சுமணன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் சடையப்பன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் நிர்வாகிகள் குமாரசாமி, காளிராஜ், மணிவண்ணன், வெங்கடேசன், மாடசாமி, ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் ராமர், சங்கரலிங்கம், முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பொருளாளர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்