ஏ.ஐ.டி.யூ.சி.யினர் ஆர்ப்பாட்டம்
ஏ.ஐ.டி.யூ.சி.யினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக உயர்த்துகிற தமிழக அரசின் சட்ட திருத்தத்தை கண்டித்தும், மத்திய அரசின் பாணியிலே விவாதமே செய்யாமல் சட்டசபையில் நிறைவேற்றி தொழிலாளர் விரோத மசோதாவை வாபஸ் வாங்கக்கோரியும் நேற்று கரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் வடிவேலன் தலைமை தாங்கினார். இதில் ஞானவேல், கலாராணி, சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.