ஓசூரில் விமான நிலையம்; மக்களை ஏமாற்றும் விதத்தில் தமிழக அரசு செயல்படக் கூடாது - எல்.முருகன் விமர்சனம்
மக்களை ஏமாற்றும் விதத்தில் தமிழக அரசு செயல்படக் கூடாது என மத்திய இணை மந்திரி எல்.முருகன் விமர்சித்துள்ளார்.;
சென்னை,
ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்பட உள்ளதாக சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது குறித்து மத்திய இணை மந்திரி எல்.முருகனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்தபோது அவர் கூறியதாவது;-
"ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் கொண்டு வரப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். ஆனால், ஓசூர் அருகிலேயே பெங்களூரு விமான நிலையம் இருக்கிறது. இந்நிலையில் ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைப்பது சாத்தியமாக இருக்குமா? நாட்டின் வளர்ச்சிக்கு நாம் எப்போதும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதே சமயம், மக்களை ஏமாற்றும் விதத்தில் தமிழக அரசு செயல்படக் கூடாது"
இவ்வாறு எல்.முருகன் தெரிவித்தார்.