'எய்ம்ஸ் என்பது உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனை; பார்த்துப் பார்த்துதான் கட்டுவார்கள்' - தமிழிசை சவுந்தரராஜன்
எய்ம்ஸ் மருத்துவமனையை வைத்து அரசியல் செய்து கொண்டே இருப்பது நல்லதல்ல என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மதுரை,
உலகத்தரம் வாய்ந்த எய்ம்ஸ் மருத்துவமனையை சாதாரண மருத்துவமனையாக நினைக்கக் கூடாது என தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
"எய்ம்ஸ் என்பது சாதாரண மருத்துவமனை இல்லை, உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனை. எனவே அதை பார்த்துப் பார்த்துதான் கட்டுவார்கள். இதைக் கொண்டு வந்து நடத்திக்கொண்டிருப்பவர் பிரதமர் மோடி என்பதால், எய்ம்ஸ் மருத்துவமனையை வைத்து அரசியல் செய்து கொண்டே இருப்பது நல்லதல்ல."
இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.