எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-11-19 19:04 GMT

வெள்ளியணையில் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு உப்பிடமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய நம்பிக்கை மைய ஆலோசகர் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார். கிராம சுகாதார செவிலியர் சுதா முன்னிலை வகித்தார். கலை நிகழ்ச்சியை வெள்ளியணை ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி தொடங்கி வைத்தார். இதில், கலை குழுவினர் எய்ட்ஸ் என்றால் என்ன? அது எவ்வாறு பரவும்? பாதிக்கப்பட்டவர்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்வது எப்படி? என்பது குறித்து கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதேபோல் தாந்தோன்றிமலை, காந்திகிராமம், திருமாநிலையூர், ராயனூர் பகுதிகளிலும் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்