விலைவாசி உயர்வைக் கண்டித்து அதிமுக இன்று ஆர்ப்பாட்டம்.!
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
கடந்த சில நாட்களாக அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களில் விலைவாசி உயர்வைக் கண்டித்து அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக சார்பில் அனைத்து ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. விலைவாசி உயர்வு காரணமாகச் சாதாரண ஏழை, எளிய மக்கள் வாழவே முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என்றும் அதிமுக தெரிவித்துள்ளது.