எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்..!
இன்று அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடக்க உள்ளது
சென்னை,
சென்னையில் இன்று அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடக்க உள்ளது.சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 5 மணிக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழக சட்டப்பேரவை நாளை கூடவுள்ள நிலையில் ,சட்டப்பேரவையில் எழுப்ப வேண்டிய பல்வேறு விஷயங்கள் குறித்து எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து ஆலோசிப்பதற்காக எம்.எல்.ஏ,க்கள் கூட்டத்தில் ஆலோசனை நடைபெற உள்ளது.