விரைவில் அதிமுக பொதுக்குழு நடைபெறும் - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

அதிமுக பொதுக்குழு விரைவில் நடைபெறும் என முன்னாள் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Update: 2022-11-18 08:55 GMT

சென்னை,

சென்னையில் முன்னாள் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

நிர்வாகிகள் நியமனத்திற்கு பிறகு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும். பிரதமர், மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தபோது அரசியல் குறித்து பேசவில்லை.

உறுதியாக அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன். ஆதரவு நிர்வாகிகளை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளேன். வாய்ப்பு கிடைத்தால் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்திப்பேன் என்றார்.

ஓபிஎஸ் இவ்வாறு அறிவித்திருப்பது அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இதனிடையே அ.தி.மு.க. செயல்படாத கட்சியாக உள்ளது, எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு இல்லை என்றும் ஓ.பன்னீர்செல்வத்தை பொறுத்தவரை, அவர் ஒரு கட்டத்தில் பாதை மாறி சென்று தவறாக நடந்து கொண்டார். இப்போது எங்களுடன் இணைந்து போக வேண்டும் என்று பேசி வருகிறார். இதில் இருந்தே அவர் திருந்திவிட்டார் என்பது தெரிகிறது.தவறை உணர்ந்த பின்னர் அவருக்கு நேசக்கரம் நீட்டுவதில் ஒன்றும் தவறு இல்லையே... வாய்ப்பு கிடைக்கும்போது ஓ.பன்னீர்செல்வத்தை நிச்சயம் சந்தித்து பேசுவேன் என டிடிவி தினகரன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்