அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு..! எதிர்க்கட்சிகளை செயல்பட விடாமல் தடுக்க நினைக்கின்றனர் - ஜெயக்குமார் காட்டம்
மின்கட்டண உயர்வை மக்கள் மறக்க ரெய்டு நடத்தப்படுகிறது.என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை,
அதிமுக ஆட்சி காலத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி. வேலுமணி. இவரது வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, செங்கல்பட்டு, தாம்பரம், காஞ்சிபுரம், சேலம், கோவை என 26 இடங்களில் இன்று காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது.
அதேபோல், அதிமுக ஆட்சி காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் விஜயபாஸ்கர். இந்நிலையில், அதிமுக முன்னாள் விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, சேலம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் 13 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் எதிர்க்கட்சிகளை செயல்பட விடாமல் தடுக்க நினைக்கின்றனர் என தந்தி டிவிக்கு தொலைபேசி வாயிலாக பேட்டி அளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது ;
முதல் அமைச்சர் காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அதிமுகவை ஒழித்து விட வேண்டும் என்று செயலாற்றுகிறார்.எதிர்க்கட்சிகளை செயல்பட விடாமல் தடுக்க நினைக்கின்றனர் காவல் துறையை ஏவல் துறையாக பயன்படுத்துகின்றனர். மின்கட்டண உயர்வை மக்கள் மறக்க ரெய்டு நடத்தப்படுகிறது.என தெரிவித்துள்ளார்.
"எஜமான் அவர்.. மக்கள் பேச கூடாதுஅதை திசை திருப்பவே ரெய்டு"கொந்தளித்த ஜெயக்குமார் #ADMK #SPVelumani https://t.co/ERVd5cB2Hu
— Thanthi TV (@ThanthiTV) September 13, 2022