அவசரத்துல கைய விட்டா அண்டாகுள்ள கூட கை போகாது- அதிமுக விமர்சனம்
அவசரத்துல கைய விட்டா அண்டாகுள்ள கூட கை போகாது என்று அண்ணாமலை குறித்து அதிமுக விமர்சனம் செய்துள்ளது.
தமிழகத்தில் ஆட்சி செய்த அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியலையும் வெளியிடுவோம் என்று அண்ணாமலை கூறியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவை மறைமுகமாக அண்ணமாலை சுட்டிக்காட்டி கூறியது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், அதிமுக செய்தி தொடர்பாளர் பாபு முருகவேல் தனது டுவிட்டரில் அண்ணாமலையை காட்டமாக விமர்சித்து இருக்கிறார். பாபு முருகவேல் தனது ட்விட் பதிவில் கூறியிருப்பதாவது:- "நேற்றைய திமுக சொத்து பட்டியல் ஒரு நகைச்சுவை காட்சி. இதில் அதிமுகவை சார்ந்தவர்களின் பட்டியலையும் வெளியிடுவாராம். அவசரத்துல கைய விட்டா அண்டாகுள்ள கூட கை போகாதுன்னு சொல்லுவாங்க. அண்ணாமலை பதட்ட படாம அரசியல் பண்ண வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.