வேளாண் உட்கட்டமைப்பு நிதி விழிப்புணர்வு முகாம்

வேளாண் உட்கட்டமைப்பு நிதி விழிப்புணர்வு முகாம்

Update: 2022-12-30 18:45 GMT

கோத்தகிரி

நீலகிரி மாவட்ட அளவிலான வேளாண் உட்கட்டமைப்பு நிதி குறித்த சிறப்பு விழிப்புணர்வு முகாம், குன்னூர் உபாசியில் நடைபெற்றது. இந்த முகாமிற்கு தோட்டக்கலை இணை இயக்குனர் சிபிலா மேரி தலைமை வகித்தார். வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். மாவட்ட வளர்ச்சி மேலாளர் (நபார்டு), தோட்டக்கலை உதவி இயக்குனர்கள், மாவட்ட வங்கி மேலாளர், வேளாண்மை அலுவலர் (வேளாண் வணிகம்), உதவி வேளாண் அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டு வேளாண் உட்கட்டமைப்பு நிதியின் சிறப்பு அம்சங்கள், அதன் மூலம் எந்தெந்த தொழில்கள் தொடவங்க விண்ணப்பிக்கலாம், பயனாளிகளின் தகுதிகள், நிதி ஒதுக்கீடு, அரசின் மானியம், பல்வேறு திட்டங்கள், திட்ட மதிப்பீட்டில் வட்டி தள்ளுபடி, விண்ணப்பிக்கும் முறைகள் குறித்து விளக்கி பேசி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த முகாமில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், விவசாயிகள், தொழில் முனைவோர் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்