"வேளாண் பட்ஜெட் விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட்டாக உள்ளது" - எடப்பாடி பழனிசாமி பேட்டி

வேளாண் பட்ஜெட் விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட்டாக உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Update: 2023-03-21 08:06 GMT

சென்னை,

2023-2024-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பபட்டது. வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். அதில் முக்கிய அம்சங்கள், முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

இந்த நிலையில், வேளாண் பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

வேளாண் பட்ஜெட் விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட்டாக உள்ளது. வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு பெரிதாக எந்த அறிவிப்பும் இல்லை. நெல் குவிண்டாலுக்கு ரூ.100 மட்டுமே ஊக்கத்தொகை அறிவித்திருப்பது ஏமாற்றமளிக்கிறது.

நெல் மூட்டைகளை பாதுகாப்பதில் திமுக அரசு கவனம் செலுத்தவில்லை. விவசாயிகளின் பாதுகாப்பை அரசு கண்டுக்கொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. கரும்புக்கு ஆதார விலை உயர்த்தப்படும் என்ற திமுக வாக்குறுதி பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. 

விவசாயிகளுக்கு எந்த நன்மையும் இல்லை. சட்டசபையில் மானிய கோரிக்கையில் இடம்பெற்றது தான், வேளாண் பட்ஜெட்டிலும் இடம்பெற்றுள்ளது.விவசாயிகளுக்கு என பெரிய திட்டங்களும் இல்லை. அவர்களை ஏமாற்றும் வகையில் உள்ளது.2 மணி நேரத்திற்கு மேல் வேளாண் பட்ஜெட் உரையை வாசித்தாலும், முக்கியமாக எது கிடைக்க வேண்டுமோ அது இல்லை.

கரும்புக்கு ஆதார விலை ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என தேர்தல் பிரசாரத்தின் போது ஸ்டாலின் அறிவித்தார்.ஆனால், பட்ஜெட்டில் ரூ.195 தான் ஒரு மெட்ரிக் டன்னுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.இது மிகப்பெரிய ஏமாற்று வேலை. விவசாயிகளை ஏமாற்றுவது போல் உள்ளது.

நெல் குவிண்டாலுக்கு ரூ.2500 வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றவில்லை..குவிண்டாலுக்கு ரூ.100 மட்டுமே ஊக்கத்தொகை அறிவித்திருப்பது ஏமாற்றமளிக்கிறது.நெல் மூட்டைகளை பாதுகாக்க கவனம் செலுத்தவில்லை. விவசாயிகளின் பாதிப்பை அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. 

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்