வேளாண் பட்ஜெட் முக்கிய அம்சங்கள்: 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு ;நெல் கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படும்

வேளாண் பட்ஜெட் முக்கிய அம்சங்களாக 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு ;நெல் கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்படும் என கூறப்பட்டு உள்ளது.

Update: 2023-03-21 06:52 GMT

சென்னை

2023-2024-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பபட்டது. வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

"கிள்ளிகுளம் வேளாண் கல்லூரியில் வாழை ஆராய்ச்சி நிலையம் அமைக்க ரூ.15 கோடி ஒதுக்கீடு"

"வாழை உற்பத்தியை அதிகரிக்க வட்டாரத்திற்கு ஒரு வேளாண் விஞ்ஞானி பொறுப்பாளராக நியமனம்"

கடலூர் கோட்டைமலை கத்திரி, மதுரை செங்கரும்பு, சிவகங்கை கருப்பு கவுனி அரிசி கிருஷ்ணகிரி அரசம்பட்டி தென்னை, உள்ளிட்ட 10 பொருட்களுக்கு புவிசார் புவிசார் குறியீடு பெறப்படும்.

"விவசாயிகளுக்கு வட்டியில்லா கடனாக ரூ.1,500 கோடி வழங்கப்படும்"

"நாகை - திருச்சி வேளாண் தொழில் வழித்தடம் திட்டத்திற்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு"

"சன்னரக நெல் குவிண்டாலுக்கு ரூ.100, பொதுரக நெல் குவிண்டாலுக்கு ரூ. 75 ஊக்கத்தொகை"

"விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க ரூ.6,536 கோடி ஒதுக்கீடு"

"வேளாண் இயந்திரங்கள், இ-வாடகை திட்டத்துக்கு நபார்டு வங்கி ரூ.500 கோடி நிதியுதவி"

"கோவை வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பூச்சிகள் அருங்காட்சியகத்தை மேம்படுத்த ரூ. 3 கோடி நிதி ஒதுக்கீடு"

"விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள், வாடகை மையங்கள் உள்ளிட்டவற்றுக்கு ரூ.125 கோடி ஒதுக்கீடு"

ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்புக்கு வட்டியில்லா கடன் வழங்க ஏதுவாக, ரூ.1500 கோடி ஒதுக்கீடு

விவசாயிகளின் அடிப்படை தகவல்களை சேகரித்து, 'GRAINS' இணையதளம் அறிமுகப்படுத்தப்படும்; இதன்மூலம் விவசாயிகளுக்கு ஒரே தளத்தில் எல்லா பயன்களும் கிடைக்கும்"

விவசாயிகளுக்கு ₹14,000 கோடி கூட்டுறவு பயிர்க்கடன் வழங்கப்படும்

Tags:    

மேலும் செய்திகள்