விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-03-16 19:43 GMT

புதுக்கோட்டையில் கலெக்டர் அலுவலகம் அருகே விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சலோமி தலைமை தாங்கினார். விலைவாசி உயர்வு, வேலையின்மை, வறுமை உள்ளிட்ட நெருக்கடியால் தள்ளப்பட்டுள்ள விவசாய தொழிலாளர்களுக்கு கேரள அரசை போல் கூலியை ரூ.600 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். விவசாய தொழிலாளர்களுக்கு தனித்துறையை தமிழக அரசு உருவாக்க வேண்டும். வீடின்றி தவிக்கும் ஏழைகளுக்கு மனைப்பட்டாவும், இலவச வீடும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின்போது கோரிக்கைகள் தொடர்பாக கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்