எட்டயபுரத்தில்விவசாய தொழிலாளர் சங்க மாநாடு

எட்டயபுரத்தில்விவசாய தொழிலாளர் சங்க மாநாடு நடந்தது.

Update: 2022-11-20 18:45 GMT

எட்டயபுரம்:

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் கோரிக்கை மாநாடு எட்டயபுரம் பாரதி மணிமண்டபம் அருகே உள்ள சமுதாய நலக்கூடத்தில் நடந்தது. மாநாட்டுக்கு கருப்பசாமி தலைமை தாங்கினார். தனபால் வரவேற்றார். சி.ஐ.டி.யு. நிர்வாகிகள் செல்வகுமார், கண்ணன், மாணிக்கவாசகம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் நடராஜன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். தொடர்ந்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க எட்டயபுரம் தாலுகா தலைவராக கருப்பசாமி, செயலாளராக ஆதிஸ்வரன், பொருளாளராக காளிராஜ், துணைச் செயலாளராக ஆறுமுகம், துணை தலைவராக சோலையப்பன் உள்ளிட்ட 12 பேர் கொண்ட குழு தேர்வு செய்யப்பட்டது.

மாநாட்டில், 100 நாள் வேலையை முழுமையாக வழங்க வேண்டும். 55 வயது நிறைவடைந்த விவசாய தொழிலாளர்களுக்கு ரூ.3ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். வீடு, நிலமற்ற விவசாய தொழிலாளர்களுக்கு இலவச பட்டா வழங்க வேண்டும் உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கு.ரவீந்திரன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். தாலுகா தலைவர் கருப்பசாமி நன்றி கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்