கள்ளக்குறிச்சி
இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ராஜேந்திரன், வேல்முருகன், ராஜீவ்காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஸ்டாலின் மணி கோரிக்கைகளை விளக்கி பேசினார். விவசாய தொழிலாளர்களுக்கு கேரள அரசை போல் குறைந்தபட்ச கூலியாக ரூ.600 வழங்க வேண்டும், விவசாய தொழிலாளர்களுக்கு தனித்துறையை உருவாக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் பூமாலை, செந்தில், பழனி, பெரியசாமி, சிவக்குமார், ஹரி கிருஷ்ணன், கோவிந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.