விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள்
ஊராட்சி பகுதிகளில் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் வழங்கப்பட்டன;
திருக்கடையூர்
திருவெண்காடு அருகே ராதாநல்லூர் ஊராட்சியில் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவரும், மாவட்ட பா.ஜ.க. தலைவருமான அகோரம், விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்களை வழங்கினார். இதில் வேளாண்மை உதவி அலுவலர் அலெக்சாண்டர், தோட்டக்கலைத்துறை உதவி அலுவலர் குமரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், ஊராட்சி செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.
திருக்கடையூரில், நடந்த நிகழ்ச்சிக்கு செம்பனார்கோவில் வேளாண்மை உதவி இயக்குனர் தாமஸ் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ், ஒன்றியக்குழு தலைவர் நந்தினிஸ்ரீதர், தி.மு.க. ஒன்றிய செயலாளர் அப்துல்மாலிக், ஒன்றிய இளைஞரணி செயலாளர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாஸ்கர் வரவேற்றார்.
நிகழ்ச்சியில், 200-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் வழங்கப்பட்டன. முடிவில் ஊராட்சி செயலாளர் வெங்கடேசன் நன்றி கூறினார். இதேபோல மாமாகுடி, காலமநல்லூர் உள்ளிட்ட ஊராட்சிகளிலும் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
பொறையாறு
பொறையாறு அருகே காளியப்பநல்லூர் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். வேளாண்மை உதவி அலுவலர் உதயசூரியன் வரவேற்றார். அதனைத்தொடர்ந்து விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் வழங்கப்பட்டன. இதில், செம்பனார்கோவில் வேளாண்மை உதவி இயக்குனர் தாமஸ் மற்றும் ஊராட்சி பகுதியை சேர்ந்த காளியப்பநல்லூர், அனந்தமங்கலம், துரடிப்பேட்டை, பத்துக்கட்டு ஆகிய கிராமங்களை சேர்ந்த திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.