தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி சார்பில் வேளாண் கண்காட்சி

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி சார்பில் வேளாண் கண்காட்சி இன்று (வெள்ளிக்கிழமை)தொடங்கி 14-ந்தேதி வரை நடக்கிறது.

Update: 2023-05-11 18:30 GMT

தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மைக்கல்லூரி சார்பில் வேளாண் கண்காட்சி பெரம்பலூரில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 14-ந் தேதி வரை நடைபெறுகிறது. தனலட்சுமி சீனிவாசன் கல்விக்குழும அரங்கில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவுக்கு தனலட்சுமி சீனிவாசன் கல்விக்குழும வேந்தர் சீனிவாசன் தலைமை தாங்குகிறார். இதில் மாவட்ட கலெக்டர் கற்பகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளாதேவி, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக இயக்குனர் (வேளாண் விரிவாக்க இயக்குனரகம்) முருகன், பெரம்பலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சங்கர் எஸ்.நாராயணன் ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைக்கிறார்கள்.

இந்த கண்காட்சி காலை10 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெறுகிறது. இதில், 100-க்கும் மேற்பட்ட உள் அரங்குகள் மற்றும் வெளி அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் விவசாயிகளுக்கு விதை முதல் விற்பனை வரை, அறுவடை முதல் மதிப்புக்கூட்டுதல் வரை பல்வேறு காட்சிப்படுத்துதலும், கண்காட்சியின் ஒவ்வொரு நாளும் காலை, மாலை என இரு வேளைகளில் கருத்தரங்குகளும் நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம் மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களில் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொள்கிறார்கள். இக்கண்காட்சியினை கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமும், தமிழ்நாடு வேளாண்மை துறையும், அகில இந்திய மாணவர் மன்றமும் ஒருங்கிணைத்து நடத்துகிறது.

Tags:    

மேலும் செய்திகள்