குறுவை தொகுப்பு திட்டம் குறித்து, வேளாண்மை இயக்குனர் ஆய்வு

குறுவை தொகுப்பு திட்டம் குறித்து, வேளாண்மை இயக்குனர் ஆய்வு செய்தார்.

Update: 2022-07-04 17:42 GMT

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்துக்கு உட்பட்ட குமாரமங்கலம், கூத்தனூர் ஆகிய பகுதிகளில் குறுவை சாகுபடி மற்றும் குறுவை தொகுப்புத்திட்டம் தொடர்பாக வேளாண்மைத்துறை இயக்குனர் அண்ணாதுரை ஆய்வு செய்தார். அப்போது நன்னிலம் அருகே குமாரமங்கலம் கிராமத்தில் தெட்சிணாமூர்த்தி என்ற விவசாயி எந்திர நடவு முறையில் 7 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்து வருவதை வேளாண்மைத்துறை இயக்குனர் பார்வையிட்டு, விவசாயிகளுடன் கலந்துரையாடினார். அதனைத்தொடர்ந்து கூத்தனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உரம் இருப்பு விவரங்களையும், விவசாயிகளுக்கு உரம் வினியோகம் தொடர்பான விவரங்களையும் கேட்டறிந்தார். ஆய்வின்போது வேளாண்மைத்துறை இணை இயக்குனர் ரவீந்திரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்