அக்னி மாலையம்மன் கோவில் கொடை விழா

பனவடலிசத்திரம் அருகே அக்னி மாலையம்மன் கோவில் கொடை விழாவில் பக்தர்கள் பூக்குழி இறங்கி வழிபட்டனர்.

Update: 2023-07-30 18:45 GMT

பனவடலிசத்திரம்:

பனவடலிசத்திரம் அருகே வடக்கு மாவிலியூத்து அக்னி மாலையம்மன் கோவில் கொடை விழா 2 நாட்கள் நடைபெற்றது. கோவிலில் உள்ள செண்பக விநாயகர், சிவஞான வெளியப்பாசாஸ்தா, நாகம்மன், அக்னி மாலையம்மன், தவசிதம்பிரான் சுவாமிகளுக்கு குற்றால தீர்த்த அபிஷேகம், மலர் அலங்காரம், சந்தன அலங்காரம், சிறப்பு யாக பூஜை நள்ளிரவு யாக பூஜை ஆகியவை நடைபெற்றது. அதனை தொடர்ந்து பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்காக விறகு கட்டைகளை அடுக்கி வைத்து தீயிட்டனர். அதனை தொடர்ந்து எரியும் தீயில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் இறங்கி அம்மனை வழிபட்டனர். இதை பக்தர்கள் பரவசத்துடன் அதனை கண்டுகளித்தனர். தொடர்ந்து 3 மணி நேரத்திற்கு மேலாக பெண்கள் எரியும் தீயில் இறங்கினர். அதனை தொடர்ந்து மாவிளக்கு எடுத்தல், பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துதல் ஆகியவை நடைபெற்றது. மதுரை, தேனி, கம்பம், கோவை, சென்னை ஆகிய ஊர்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்