தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது - முன்னாள் அமைச்சர் காமராஜ்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என முன்னாள் அமைச்சர் காமராஜ் குற்றம் சாட்டி உள்ளார்.

Update: 2023-05-29 21:37 GMT

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என முன்னாள் அமைச்சர் காமராஜ் குற்றம் சாட்டி உள்ளார்.

ஆர்ப்பாட்டம்

தி.மு.க. ஆட்சியின் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் அ.தி.மு.க.வின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ. ராம.ராமநாதன் வரவேற்றார். முன்னாள் எம்.பி. பாரதிமோகன், மாவட்ட அவைத் தலைவர் ராம்குமார், ஒன்றிய செயலாளர்கள் அசோக்குமார், முத்துகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசாமி, இளமதி சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் காமராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசியதாவது:-

போதைப்பொருட்கள் மலிவு

தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் ஊழல் நிலவுகிறது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறுகின்றன. எங்கு பார்த்தாலும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் மலிந்து கிடைக்கிறது. தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே கஞ்சா விற்பனை நடைபெறும் நிலை உருவாகி உள்ளது. எனவே தி.மு.க. அரசு உடனடியாக ஆட்சியை விட்டு விலக வேண்டும்.

சட்டம் ஒழுங்கு

கள்ளச்சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு தி.மு.க. அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். போலீஸ் துறை ஆளும் கட்சியின் ஏவல் துறையாக இருந்து வருகிறது. மணல் கடத்தலை தட்டிக்கேட்ட கிராம நிர்வாக அதிகாரி படுகொலை செய்யப்படுகிறார்.

அந்த அளவுக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட வக்கீல் பிரிவு தலைவர் பாலமுருகன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு பொருளாளர் ரகுவரன், ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் சுப்பு அறிவழகன், ஒன்றிய மகளிரணி செயலாளர் ராஜலட்சுமி வீரபாண்டியன், மாவட்ட விவசாய பிரிவு இணைச் செயலாளர் சங்கர், சாக்கோட்டை ஊராட்சி நிர்வாகி சபேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கும்பகோணம் ஒன்றிய செயலாளர் சோழபுரம் அறிவழகன் நன்றி கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்