முதல்-அமைச்சர் உழவர் பாதுகாப்புத் திட்ட சிறப்பு முகாம்
மடத்துக்குளம் வட்டாரத்தில் முதல்-அமைச்சர் உழவர் பாதுகாப்புத் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.
மடத்துக்குளம் வட்டாரத்தில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலகங்களிலும் அந்தந்த கிராம நிர்வாக அலுவலர் தலைமையில் முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் உறுப்பினராக பதிவு செய்துள்ளவர்களிடமிருந்து நலத்திட்டங்கள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இந்த முகாமில் திருமண உதவித்தொகை, விபத்து நிவாரணம், இயற்கை மரண உதவித்தொகை, சடங்கு செலவுக்கான உதவித்தொகை, முதியோருக்கான ஓய்வூதியம் மற்றும் கல்வி உதவித்தொகை பெற 30-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்கள் வழங்கினர்.