திருவாலி ஏரியில் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும்

திருவாலி ஏரியில் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என்று அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-07-05 17:41 GMT

திருவெண்காடு:

திருவாலி ஏரியில் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என்று அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாலி ஏரி

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு அருகே உள்ள திருவாலி ஏரி மூலம் திருவாலி, புதுத்துறை, கோட்டகம், திருநகரி, நெம்மேலி உள்ளிட்ட கிராமங்கள் உள்ள சுமார் 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விலை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் திறக்கப்பட்ட நீர் தற்போது திருவாலி ஏரியில் நிரம்பி வருகிறது. ஏரியிலிருந்து 6 வாய்க்கால்கள் மூலம் மேற்கண்ட கிராமங்களில் உள்ள விலை நிலங்களுக்கு பாசன வசதி கிடைக்கும். ஆனால் ஏரியில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகள் வாய்க்காலின் மதகுகளில் அடைபட்டுள்ளதால், நீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

விரைவில் அகற்ற கோரிக்கை

தற்போது மேற்கண்ட கிராமங்களில் குறுவை சாகுபடி பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நேரத்தில் தண்ணீர் இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரி மற்றும் வாய்க்கால் மதகுகளில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாலி ஏரியில் ஆகாயத்தாமரை செடிகளை அகற்றக்கோரி சீர்காழி ஊராட்சி ஒன்றியம் திருவாலி ஊராட்சி தலைவர் தாமரைச்செல்வி திருமாறன் பொதுப்பணித்துறையினருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்