பொங்கல் பண்டிகை முடிந்து சொந்த ஊர் திரும்புவதால்ஈரோடு ரெயில், பஸ் நிலையங்களில் அலைமோதிய பயணிகள் கூட்டம்
பொங்கல் பண்டிகை முடிந்து பொதுமக்கள் சொந்த ஊர் திரும்புவதால் நேற்று ஈரோடு ரெயில் நிலையம் மற்றும் பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
பொங்கல் பண்டிகை முடிந்து பொதுமக்கள் சொந்த ஊர் திரும்புவதால் நேற்று ஈரோடு ரெயில் நிலையம் மற்றும் பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
பொங்கல் பண்டிகை
ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விசைத்தறி கூடங்கள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் தங்கியிருந்து வேலை செய்து வருகிறார்கள். இதேபோல் ஈரோட்டில் உள்ள பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரிகளில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை உள்பட தென்மாவட்டங்களை சேர்நத ஏராளமான மாணவ- மாணவிகளும் படித்து வருகிறார்கள்.
இவர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தனர். இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு விடப்பட்டு இருந்த தொடர் விடுமுறை நேற்றுடன் நிறைவடைந்தது. இதனால் ஏராளமானவர்கள் சொந்த ஊரில் இருந்து ஈரோடு திரும்பினர்.
பயணிகள் கூட்டம்
இதேபோல் பல்வேறு மாவட்டங்களை சே்ாந்தவர்கள் ஈரோட்டில் உள்ள உறவினர்கள் வீடுகளுக்கு வந்திருந்தனர். அவர்களும் விடுமுறையை மகிழ்ச்சியாக கழித்துவிட்டு நேற்று அவர்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். இதன் காரணமாக ஈரோடு பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலையங்களுக்கு வந்த பஸ், ரெயில்களில் வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அலைமோதியது.
குறிப்பாக ரெயில்களில் பொது பெட்டிகளில் பயணிகள் நிற்க முடியாத அளவுக்கு கூட்ட நெரிசல் காணப்பட்டது.
இதேபோல் ஈரோடு பஸ் நிலையத்தில் திருப்பூர், கோவை, சேலம், நாமக்கல் செல்லும் பஸ்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இதனால் அந்த பகுதிகளுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன.
பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் ஈரோடு ரெயில் நிலையம் மற்றும் பஸ் நிலையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனா்.