பரோலில் வெளிவந்து 14 ஆண்டுகள் பதுங்கி இருந்தார்... தலைமறைவான ஆயுள் தண்டனை குற்றவாளி கைது
பரோலில் வெளிவந்து 14 ஆண்டுகள் பதுங்கி தலைமறைவான ஆயுள் தண்டனை குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.;
விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமத்தை சேர்ந்தவர் சசிக்குமார் (வயது 49). சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர், கடந்த 1994-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், கடந்த 2009-ம் ஆண்டு சிறையில் இருந்து 3 நாட்கள் பரோலில் வந்த சசிக்குமார் திடீரென தலைமறைவாகி விட்டார். இதையடுத்து, சிறைத்துறையினர் அளித்த புகாரின் பேரில், விருகம்பாக்கம் போலீசார் தலைமறைவாக இருந்த அவரை தீவிரமாக தேடிவந்த நிலையில், நேற்று கோயம்பேட்டில் பதுங்கி இருந்த சசியை கைது செய்தனர்.
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு பரோலில் தலைமறைவான குற்றவாளி 14 ஆண்டுகளுக்கு பின்னர், கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.