தட்டார்மடத்தில் 20ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வாரச்சந்தை செயல்பட்டது

தட்டார்மடத்தில் 20ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வாரச்சந்தை செயல்பட்டது

Update: 2023-10-11 18:45 GMT

தட்டார்மடம்:

நடுவக்குறிச்சி பஞ்சாயத்துக்கு உட்பட்ட தட்டார்மடத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வாரச்சந்தை செயல்பட்டு வந்தது. இதன் மூலம் சுற்றுவட்டாரத்திலுள்ள ஏராளமான கிராமமக்கள் பயனடைந்து வந்தனர். வாரசந்தையில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வந்தது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி வாரச்சந்தை இடையூறு இல்லாமல் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால் ஆக்கிரமிப்புகளால் வாரச்சந்தை செயல்பட முடியாமல் முடங்கியது. இதனால் சுற்றுவட்டார கிராம மக்கள், வியாபாரிகள், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்றி மீண்டும் வாரச்சந்தை செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் மக்கள் கோரிக்கையை ஏற்று பஞ்சாயத்து நிர்வாகம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதை தொடர்ந்து நேற்று வாரச்சந்தை தொடக்க நிகழ்ச்சி நடந்தது. வாரச்சந்தையை ஊராட்சித் தலைவர் சபிதா செல்வராஜ் தொடங்கி வைத்தார். நேற்று கோழி மற்றும் ஆடுகள் விற்பனை நடந்தது. ஏராளமான வியாபாரிகள், பொதுமக்கள் குவிந்து அவற்றை வாங்கி சென்றனர். அடுத்த வாரம் காய்கறி மற்றும் இதர கடைகளுடன் வாரச்சந்தை செயல்படும் என ெதரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்