அடையகருங்குளம் பஞ்சாயத்து கூட்டம்
அடையகருங்குளம் பஞ்சாயத்து கூட்டம் நடைபெற்றது.
விக்கிரமசிங்கபுரம்:
அடையகருங்குளம் பஞ்சாயத்து சாதாரண கூட்டம் நடைபெற்றது. தலைவர் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் மதன கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். தீர்மானங்களை ஊராட்சி செயலர் சுரேகா வாசித்தார்.
கூட்டத்தில் பாபநாசம் கோவில் பின்புறம் பல ஆண்டுகளாக பொதுமக்கள் தலையணை மற்றும் வைகுண்ட சுவாமி கோவில் வழிபாட்டு தலங்களுக்கும், விவசாய நிலங்களுக்கும் சென்று வரும் நிலையில் இந்து சமய அறநிலையத்துறை மூலம் அங்கு இரும்பு கேட் அமைக்கப்பட இருப்பதாக அறிந்தோம். இதனால் பக்தர்கள், பொதுமக்களுக்கு பெரிதும் இடையூறாக இருக்கும். எனவே இதனை மறுபரிசீலனை செய்ய மாவட்ட கலெக்டரை அணுகுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் வார்டு உறுப்பினர்கள் அன்னம், பூதலிங்கம், சீதா, கணேஷமூர்த்தி, ராணி, ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.